குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலன நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes ) கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.easynotecards.com
இத்தளத்திற்கு சென்று குறிப்புகள் ( நோட்ஸ் ) மட்டுமல்ல புத்தகங்களையும் எளிதாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம். பல்வேறு வகையான துறைகளில் நோட்ஸ் நமக்கு கிடைக்கிறது. அதிகமாக கொடுத்தால் படிக்க நேரம் இல்லை என்று நாம் சொல்வோம் என்பதை கருத்தில் கொண்டு இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. சில வகையான நோட்ஸ் ஒரே வரிகளில் இருக்கிறது, சில வகையான குறிப்புகளில் படங்களும் சேர்ந்தே இருக்கிறது. சில வகையான கேள்விகளுக்கு விடை இத்தளத்தில் இருக்கிறது. கூடவே இதனுடன் ஒரு Quiz -ம் சேர்ந்துள்ளது. புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால் இனி நேரம் ஆகாது. எல்லாமே குறிப்பு தான் அதுவும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரே வரியில் இருக்கிறது. நம் சுட்டிக் குழந்தைகளும் பல்வேறு துறைவாரியான தகவல்களை தெரிந்து கொள்ள இத்தளம் கண்டிப்பாக உதவும்.
No comments:
Post a Comment