Wednesday, August 3, 2011

வலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் பெற


Google +1 button latest previewsவலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1 பட்டனுக்கான புதிய வசதிகளை முதல் ஆளாக உடனடியாக அறியவும் பெறவும் ஒரு வழி ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்கு கீழ் உள்ள இணைப்பில் சென்று கூகிள்+1 புராஜெக்ட் குருப்பில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை அளித்தால் போதும்.
http://www.google.com/+/learnmore/platform-preview/
இதன் மூலம் கூகிள்+1 பட்டனில் வந்துள்ள புதிய வசதிகளையும் மாற்றங்களையும் மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் பார்க்கவும் சோதிக்கவும் முடியும். இதில் பதிந்த பின்னர் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விட்டு வலைப்பக்கங்களில் உள்ள கூகிள்+1 பட்டனைப் பாருங்கள். எதேனும் புதிய வசதி இருப்பின் அதனை உடனடியாகப் பார்க்க முடியும்.

இன்று கூகிள்+1 பட்டனில் ஏற்பட்டிருக்கும் புதிய வசதி குறித்து பார்ப்போம். இதற்கு முன்னர் கூகிள்+1 பட்டனில் ஓட்டுப்போட சென்றால் “Click here to publicly +1 this as Ponmalar” என்று வரும். கிளிக் செய்த பின்னர் “You publicly +1 this as Ponmalar” என்று மட்டுமே வரும்.

Google +1 button latest previews
தற்போது கூகிள்+1 பட்டன் மீது மவுசைக் கொண்டு போனால் கூகிள் பிளஸில் இருக்கும் உங்கள் நண்பர்கள் ஏற்கனவே யாரும் ஓட்டுப் போட்டிருந்தால் அவர்களின் பட்டியல் அழகாக காட்டப்படுகிறது. அதன் மேலெ “Click here to publicly +1 this as Ponmalar” என்ற வரியும் வந்து விடுகிறது. பின்னர் ஒட்டுப் போட்ட பின்னர் உறுதிப்படுத்தும் விதமாக “Ponmalar Publicly +1’d this” என்ற செய்தி கிடைக்கும்.
Google +1 button latest previews
எப்போது அந்த பட்டனின் மீது மவுசைக் கொண்டு போனாலும் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் அதனைப் பட்டியல் போன்று காண்பிக்கும்.மேலும் அந்தக் கட்டுரைக்கு அவர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களா என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளமுடியும். இது போன்ற புதிய வசதிகளை வலைத்தளம் வைத்திருப்பவர்கள் இந்த சேவையில் சேர்ந்தால் உடனடியாக அறியலாம்.
Google +1 button latest previewsஇணையதளம் : http://www.google.com/+/learnmore/platform-preview/
 

No comments:

Post a Comment