Friday, August 5, 2011

இணைய வரலாற்றில் கூகுள் பிளசின் மெகா சாதனை # அதிர்ச்சி ரிப்போர்ட்

கூகுள் பிளஸ் இணையம் முழுவதும் ஒரே பேச்சு இதை பற்றி தான். பேஸ்புக்கை கட்டுபடுத்த சரியான நேரத்தில் கூகுள் வெளியிட்ட இந்த சமூக தளமான கூகுள் பிளஸ் வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே 25 மில்லியன் வாசகர்களை பெற்று இணையத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் குறைந்த நாட்களிலேயே அதிக வாசகர்களை கவர்ந்த தளமாக Myspace தளம் இருந்தது. அந்த சாதனையை இப்பொழுது கூகுள் பிளஸ் பெற்றுள்ளது.  இந்த வளர்ச்சியை பார்த்து மற்ற சமூக தளங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன


கூகுள் பிளஸ் ஜூன் மாதம் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிப்படி கடந்த ஜூலை மாதம் 25 தேதியின் படி இந்த தளத்தின் வாசகர்கள் 25 மில்லியன் இலக்கை எட்டி விட்டதாக பிரபல Comstore நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வாசகர்கள் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.  இது இணைய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேஸ்புக் தளம் 25 மில்லியன் வாசகர்களை அடைய சுமார் 3 ஆண்டுகள் எடுத்து கொண்டதாகவும் , ட்விட்டர் தளம் 30 மாதங்களை எடுத்து கொண்டதாகவும் Comstore நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. மற்றொரு சமூக தளமான Myspace தளம் ட்விட்டர்,பேஸ்புக்கை விட விரைவாக(2 வருடங்களுக்கு குறைவாக) இந்த இலக்கை அடைந்ததாம். ஆனால் வெளியிட்ட ஒரே மாதத்தில் இத்தகைய வளர்ச்சியை எந்த இணையதளமும் இதுவரை எட்டியதில்லை என கூகுள் பிளசுக்கு புகழாரம் சூட்டியுள்ளது. 

கூகுள் பிளஸ் வாடிக்கையாளர்கள் நாடுகளின் வரிசைப்படி:

அமெரிக்கா- 6 மில்லியன் வாசகர்கள் 
இந்தியா - 3.6 மில்லியன் 
கனடா(UK) - 1 மில்லியன் 
ஜெர்மனி - 920,000
பிரேசில் - 180,000
பிரான்ஸ் - 500,000
தைவான் - 500,000 

என்று பல நாடுகளில் வாசகர்களின் வட்டம் பரந்து காணப்படுகிறது. இன்னும் இந்த கூகுள் பிளஸ் தளம் சோதனை பதிப்பில் தான் உள்ளது என்பது இன்னொரு அதிர்ச்சி அளிக்கும்  செய்தி இன்னும் முழு பதிப்பில் வந்தால் என்னென்ன சாதனைகளை நிகழ்த்த போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment