Wednesday, August 3, 2011

கூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக காட்டும் பயனுள்ள நீட்சி.

கூகிள் இணையதளத்தில் சென்று படம் தேடும் நபர்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனி குரோம் உலாவியில் கூகிள் படங்களை 3D-ல் அழகாக பார்க்கலாம், ஒவ்வொரு படத்தையும் அங்கிருந்தே முழுமையாக்கி பார்க்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 2
Google Images -ல் சென்று படங்களை தேடுபவர்கள் சில படங்களை சொடுக்கி அடுத்து வரும் திரையில் தான் அந்த படங்களை முழுமையாக பார்க்க முடியும் என்று இல்லாமல ஒரே திரையில் கூகிள் இமெஜில் நாம் தேடும் அத்தனை படங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் 3D – ல் காட்டுகின்றனர், நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.
படம் 1
கூகிள் குரோம் உலாவியில் இருந்து கொண்டு நாம் மேலே இருக்கும் முகவரியை சொடுக்கி வரும் திரையில் Install என்ற  பொத்தானை சொடுக்கி எளிதாக நிறுவலாம். நிறுவி முடித்ததும் குரோம் உலாவியின் டூல் பாரில் படம் 1-ல் உள்ளது போல் ஒரு படம் தெரியும் அதை சொடுக்கி Launch cooliris என்று மற்றும் ஒரு இணையப்பக்கம் திறக்கும் அங்கு நடுப்பக்கத்தில் இருக்கும் கூகிள் தேடல்  கட்டத்திற்குள் நாம் தேடவிருக்கும் படங்களின் பெயர்களை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கவும். ஒரு சில நிமிடங்களில் நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் அத்தனை படங்களும் 3D-ல் வந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் , கூடவே அந்தப்படங்களை சொடுக்கி அங்கிருந்தே பெரிதாக பார்க்கலாம், படங்கள் அல்லாத வெளியே சொடுக்கி எளிதாக அடுத்தப் படத்தை பார்க்கலாம் , மவுஸ் -ல் இருக்கும் Scroll bar பயன்படுத்தி Zoom in, Zoom out செய்தும் பார்க்கலாம், தொழில் நுட்ப புதுமை விரும்பிகளுக்கும், கூகிளில்  படங்களைத் தேடி ஒவ்வொரு பக்கமாக செல்லும் நபர்களுக்கும் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நீட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment