நம்மில் சரியான பிறந்த தேதியை அறியாதவர்கள் பலர் உள்ளார்கள் .
ஆச்சரியமாக உள்ளதா ?விஷயம் இதுதான் .
முன்பெல்லாம் பிறந்த தேதிகளை பெரும்பாலும் தமிழ் முறைப் படியே குறித்து வைத்திருப்பார்கள் .ஜாதகங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலத்தேதி இல்லாமலிருக்கும் .உதாரணமாக சித்திரை 12 ,ஆவணி 20 இதுபோல .
இதன் காரணமாக பலருக்கு தாங்கள் பிறந்த ஆங்கிலத்தேதி தெரியாமலேயே இருக்கும் .
இனி இவர்கள் கவலைப் படவேண்டியதில்லை .தமிழ்த் தேதியை கொண்டு ஆங்கிலத் தேதியை அறியவும் ஆங்கிலத் தேதி மூலமாக தமிழ் தேதியை அறியவும் முடியும் .
PROKERALA என்னும் இணைய தளம் வாயிலாக நீங்கள் இந்த வசதியைப் பெறலாம் .இனி நீங்கள் தைரியமாக நீங்கள் பிறந்த தேதியை யாரிடமும் சொல்லலாம் .இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம் .
No comments:
Post a Comment