நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.
WEBCAM GIRL FAIL
இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள் வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வந்த மூன்று புதிய பேஸ்புக் Spam கள் வேகமாக எல்லோரது பக்கத்திலும் பரவிவருகின்றன.
இதில் முதலாவது தோலுக்கு அடியில் ஒரு சிலந்தி (OMG ! A SPIDER UNDER THE SKIN!) என்ற செய்தியுடன் வருகிறது
இந்த செய்தி முழுவதும் ஆங்கில பெரிய எழுத்துக்களில் காணப்படும். தவிர இங்கு "I" என்ற எழுத்துக்கு பதிலாக “L" என்ற எழுத்து Replace செய்யப்பட்டிருக்கும். இதன் செயற்பாடுகள் முன்னர் வந்த OMG Scam இனைப் போன்றே இருந்தாலும் இது சற்று வித்தியாசமாக உள்ளது.
அந்த வீடியோவை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உங்களிடம் ஏற்படுத்தி, நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களிடம் பல்வேறு தகவல்களை பெற்று வேறு தளத்திற்கு திசை திருப்பி விடுகிறது.
ஆனால் குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சி எங்கும் இருக்காது.
இவர்களின் நோக்கம் , ஒன்று அடுத்தவர்களின் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து தகவல்கள் திருடுவது. அடுத்தது நீங்கள் கிளிக் செய்யும் இணைப்புகளூடாக பணம் உழைப்பது ( PTC மூலம்)
OMG TOWEL PULLING PRANK SETS THIS POOR GIRL TOTALLY UNDRESSED
இது தற்போது இறுதியாக வந்திருக்கும் OMG வகையை சார்ந்த ஒரு Scam வீடியோ. இது முன்னையதைவிட அபாயமானது. அதாவது இந்த இணைப்பை கிளிக் செய்து அது கேட்கும் விபரங்களையும் கொடுத்துவிட்டால் உடனடியாகவே உங்கள் பெயரில், உங்களுடைய நண்பர்களுடைய சுவரில் (Wall) செய்தியை பகிர்ந்துவிடுகிறது. நண்பர்கள் நீங்கள் பகிர்ந்ததாக நினைத்து பார்த்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
OMG,, Towel Pilling Prank Sets this poor girl totally undressed scam.
It is totally shocking as well as somewhat humorous
இதுதான் அந்த செய்தி
இது “Silly girl wants to tease some guys on her webcam – The Fail was obvious” என்ற செய்தியுடன் பரவுகிறது.
இங்கு உங்கள் தகவல்கள் பெறப்பட்ட பின் வழமை போல எந்த வீடியோவும் காட்டப்படமாட்டாது.
இது இவ்வாறான மோசடிக்காரர்களின் தளங்களுடைய Traffic ஐ அதிகரிப்பதற்காகவும், உங்களின் தகவல்களை விற்று பணம் சம்பாதிப்பதற்காகவும் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடு Click jacking எனப்படுகிறது இது பற்றி அறிய இங்கே
முன்னர் வந்த சில Click Jacking செய்திகள் |
இதை கையாளுவது எப்படி?
* இவை உங்கள் நண்பர்களின் பெயரிலேயே பகிரப்படுகின்றன. ஆகவே உங்களுடைய நண்பர்தான் பகிர்ந்தார் என நினைத்து இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்
* இவ்வாறான இவ்வாறான இணைப்புகளை கண்டால் அதன் வலது பக்க மேல்மூலையில் உள்ள “ x " குறியீட்டை அழுத்தி அந்த செய்தியை நீக்கிவிடுங்கள். ஏனெனில் அவை உங்கள் பெயரில் உங்களது நண்பர்களுக்கும் பகிரப்படும்
* ஏற்கனவே இவ்வாறான இணைப்புக்களை கிளிக் பண்ணியிருந்தால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கிற்கு சென்று Account Setting - Application Setting என்ற வழியே சென்று அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுங்கள் (இது வெள்ளம் வந்த பின் அணை கட்டுவது போன்றதுதான்.. இருந்தாலும் அடுத்து வரப்போகும் ஆபத்துக்களை ஓரளவு குறைக்கும்)
* இவற்றில் சில < > போன்ற HTML Tag உடன் வருகின்றன. ஆகவே அவற்றை அடையாளம் காண்பது சுலபம்
* நீங்கள் எந்த வீடியோ இணைப்பையாவது கிளிக் செய்யும்போது, அதை பார்ப்பதற்காக ஏதாவது தகவல்கள் அல்லது அனுமதிகள் கேட்கப்பட்டால் உடனடியாகவே அவற்றை தவிருங்கள்.
பாதுகாப்பு என்பது எப்போதும் எம் கைகளிலேயே உள்ளது.
No comments:
Post a Comment