Thursday, July 28, 2011

வீடியோக்களை Convert செய்ய ஒரு நல்ல மென்பொருள்


நம்மிடம் இருக்கும் வீடியோக்கள் ஒவ்வொன்ரும் ஒவ்வொரு extensions (.MP4,.FLV,.WMV,.MKV,.RM,.MOV,.VOB,.AVI,MKV) இல் இருக்கும் இதனை Apple iphone & ipod & ipad , Nokia , Microsoft,Google,sony Ericsson,samsung... போன்ற Mobile Device இற்கு மாற்ற வேண்டும் என்றால் தனித் தனி converter தேவை. இதைவிட ஒரே converter இல் செய்தால் எப்படி இருக்கும்.அதை பற்றித்தான் இன்றைய பதிவு.


 பல  converter களை நாம் பயன்படுத்தி செய்யும் வேலையை இந்த Format Factory என்ற converter வேகமாக செயல்படுகிறது, அதுவும் இலவசமாக..இதில் என்ன என்னசெய்ய முடியும் என்று பார்ப்போம்.
>>அனைத்து வகையான Mobile Device இற்கும் ஏற்றாப்போல் வீடியோவை மாற்றியமைக்க முடியும்.
>> எந்தவொரு வீடியோவையும் MKV, MPG, VOB, MOV, FLV, SWF, MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV போன்றவற்று மாற்றும் வசதி.

>> வீடியோ மட்டும் இன்றி எந்தவொரு ஓடியோவையும் MP3,WMA,FLAC,AAC,MMF,AMR,M4A,M4R,OGG,MP2,WAV,WAV போன்றவற்றுக்கு   மாற்றும் வசதி.

>>அது மட்டும் இன்றி  Pictures ஐயும் மாற்றும் வசதி.

>> DVD/CD ஐ ISO/CSO ஆகமாற்றும் வசதி.

>>ISO ஐ CSO ஆகமாற்றும் வசதி.

>>பல வீடியோக்களை ஒரே வீடியோவாக ஒன்றினைக்கும் வசதி.

>>பல ஓடியோவை ஒரே ஓடியோவாக ஒன்றினைக்கும் வசதி.

இதுமட்டும் இன்றி இன்னும் பலசிறப்பம்சங்களை கொண்ட இந்த மென்பொருளை  Download  செய்ய இங்கு http://format-factory.en.softonic.com செல்லவும்.

Wednesday, July 27, 2011

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் Group Chat செய்ய


இலவசமாக மெயில் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. ஜிமெயில் பல வசதிகள் வாசகர்களை கவர்ந்துள்ளது அதில் Chat எனப்படும் அரட்டை பகுதியும் ஒன்று. நம் நண்பர்களுடன் எளிதாக அரட்டை அடிக்கும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது.ஜிமெயிலில் ஒரு நண்பருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு நண்பர் நமக்கு சாட்டில் அழைப்பார் இந்த நண்பர் நாம் ஏற்கனவே அரட்டை அடித்து கொண்டிருப்பவருக்கும் நண்பராக இருப்பார் அப்படியென்றால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரட்டை அடிப்பதை தவிர்த்து ஒரே க்ரூப்பில் மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அனைவரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மொபைலில் Conference call உள்ளதல்லாவா அதே தான் ஒரே நேரத்தில் பலருடன் பேசி மகிழலாம்.
இந்த வசதியை உபயோகபடுத்த 
  • இப்பொழுது நீங்கள் ஜிமெயிலில் யாருடனோ அரட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 
  • உங்களுக்கு இன்னொரு நபரை உங்கள் குரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால் உங்கள் சாட் விண்டோவில் மூன்றாவதாக உள்ள Group chat ஐக்கானை க்ளிக் செய்யுங்கள். 
  • அதை க்ளிக் செய்தவுடன் வரும் சிறிய கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் மெயில் ஐடியை கொடுத்து  invite பட்டனை அழுத்தவும்.
  • நீங்கள் invite பட்டனை அழுத்தியவுடன் புதிய நண்பருக்கும் ஏற்க்கனவே அரட்டையில் இருப்பவருக்கும் அழைப்பிதழ் செல்லும் அதை இருவரும் ஏற்று கொண்டால் மூன்று பேரும் ஒன்றாக சேட்டிங்கில் ஈடுபடலாம். 
  • இன்னொரு நண்பரை சேர்க்க வேண்டும் என நினைத்தாலும் இதே முறையில் சேர்த்து அரட்டை அடிக்கலாம்



பாப்பாவுக்கு வாங்கி வச்சிருந்ததை இந்த கரடி தூக்கிட்டு வந்து செய்யுற வேலைய பாருங்க ஹீ ஹீ 

Tuesday, July 26, 2011

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க



கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி வன்தட்டினை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கூகுள் பிளசில் உங்கள் அப்டேட்களை பார்க்க முடியாதவாறு ஒருவரை தடை செய்ய


பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணைய தளம் உபயோக படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்க படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே. சமூக இணைய தளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும் அவர்களும் தகவல்கள் பார்த்து அதற்க்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.
தடை செய்வதால் ஏற்படும் பயன்கள்:  
  • அவருடைய அப்டேட்கள் இனி உங்கள் Stream பகுதியில் அப்டேட் ஆகாது.
  • நீங்கள் அப்டேட் செய்யும் செய்திகளுக்கு அவரால் கமென்ட் கூட போட முடியாது. 
  • Block செய்வதால் உங்கள் Circle-ல் இருந்து நீக்க படுவதால் உங்களின் அப்டேட்கள் அவருக்கு செல்லாது.
  • ஆனால் முக்கியமான விஷயம் நீங்கள் Public பகுதியில் பகிரும் விஷயத்தை தடை செய்தாலும் அவரால் பார்க்க முடியும்.
தடை செய்யும் முறை 
  • இதற்க்கு முதலில் அந்த குறிப்பிட்ட நபரின் புரோபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • அவர் ஏதாவது கேமென்ட் போட்டிருந்தாலோ, உங்கள் circle-ல் அவர் இருந்தாலோ அந்த போட்டோவை க்ளிக் செய்தால் அவரின் புரோபைல் பகுதிக்கு அழைத்து செல்லும். 
  • அடுத்து கீழே படத்தில் காட்டியுள்ளது போல Block என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் 
  • அங்கு உள்ள Block பட்டனை அழுத்தினால் அவரின் ஐடி தடை செய்யப்பட்டு விடும். 
  • உங்கள் அப்டேட்களை அவரால் பார்க்க முடியாது.

Nokia Phone இல் Application களை Bluetooth இல் அனுப்புவது எப்படி?


நீங்கள் Nokia Phone உபயோகிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.சாதாரணமாக  Bluetooth இல் Music,video,image போன்றவற்றை மாத்திரமே அனுப்ப முடியும். Application களை Bluetooth அனுப்ப முடியாது.அப்படி அனுப்பினால்  "Unable to send protected object" என்ற செய்திதான் வரும்.இதனை எப்படி சரி செய்வது அதாவது  Bluetooth  மூலம் Application  அனுப்பவது எப்படி என்று பார்ப்போம். 
 
இதற்கு என்றுஒரு Application  இருக்கிறது, அதன் பெயர் Mobile Guard
 
இதில் பலவசதிகள் காணப்படுகின்றன குறிப்பாக சொல்லப்போனால்,

>> Bluetooth  மூலம் Application களை அனுப்ப முடியும் (Mobile Guard ஐ Open செய்து File Mgr இற்கு சென்று அனுப்புங்கள்).

>> Phone ஐ Switch on செய்யும்போது அதாவது ஆரம்பிக்கும்போது  இயங்கும் Application களை நிறுத்தும் வசதி.

>>நாம்  இணையத்தில்  வலம் வந்து கொண்டிருக்கும் போது எத்தனை Data Use பன்னி இருக்கம் என்டு மேலே காட்டிக்கொண்டு இருக்கும் அதுவும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு எத்தனை MB , Data Use  பன்ன வேண்டும் என்று செய்து வைக்கலாம் அதுமட்டும் இல்லாமல் எந்த எந்த Application எத்தனை சதவீதம் பாவித்து இருக்கு என்டு கூட தெரிஞ்சு கொள்ள கூடிய வசதி.

>>Phone இல் பதிந்து வைத்திருக்கும் Application பாவித்தவர்களால் வழங்கப்பட்ட மதிப்பீட்டையும் (Rating) தெரிஞ்சு கொள்ள முடியும்.

>>இன்னும் நிறைய வசதிகளை கொண்ட இந்த Application ஐ Download செய்ய http://netqin.mobiஇங்கு செல்லவும்.

பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?


பிளாக்கரில் வலைபதிவு வைத்திருப்பவர்கள் சிலருக்கு Navbar இருப்பது பிடிக்கவில்லை அதனால் அதை அழிக்க முயற்ச்சிப்போம் அதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன், பார்த்துப் பயன்படுத்தி Navbar 'ஐ அழித்திடலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 


பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். 


  <b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name:     Simple
Designer: Josh Peterson
URL:      www.noaesthetic.com
----------------------------------------------- */
#navbar-iframe {
   display: none !important;
}

/* Variable definitions
   ====================
மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்து நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை  மட்டும் தான் இணைக்க இணைக்க வேண்டும்.

இணைத்த பிறகு Save Template என்ற பட்டனை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைதளத்தில் Navbar மறைந்துவிடும்.

Monday, July 25, 2011

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.


வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ் ( Tricks ).

சோசியல் நெட்வொர்க் தளமான Facebook  -ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் இந்தப்பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும்  விளம்பரங்களை எளிதாக நீக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது.

படம் 2
குரோம் உலாவியில் மேலே குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம், இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை ,  பேஸ்புக் -ல் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும் ஆனால் இனி எந்த விளம்பர  தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை, ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு  பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher


இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன. 

இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகிள், பேஸ்புக், யூடியுப் (Google, youtube, facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணிணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது. நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை காப்பி செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.


இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப
(Download size) பெற முடியும்.


இணைய முகவரி : http://www.webvideofetcher.com

இந்த இணையதளத்தின் சேவையைப் பயன்படுத்த உங்கள் கணிணியில் ஜாவா வசதி அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
http://www.java.com/en/download/
 

பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக

உங்களிடம் இருக்கிற பிடிஎப் கோப்புகளில் பாஸ்வேர்ட் Password கொடுக்கப்பட்டிருப்பதால் திறக்க முடியவில்லையா கவலை வேண்டாம்.  

அந்த கோப்பினில் இருக்கும் பாஸ்வேர்டினை உடைக்காமல் உங்கள் பாஸ்வேர்டினை படித்து சொல்லும் இணையத்தளம் ஒன்று மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

RC4 40-bit, 128-bit, AES128(128-bit AES/AESV2) and AES256(256-bit AES/AESV3) encryption. போன்ற செக்யுரிட்டி பாஸ்வேர்டாக இருந்தாலும் தெரிந்து கொள்ள முடியும். 

பிடிஎப் பாஸ்வேர்டினை படிக்க இணையத்தளச் சுட்டி

சிறுவர்களுக்கான வீடியோ தளம்

பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகசிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்த்தல்.ஆகும் குழந்தைகள் கணினியில் வீடியோ கட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகமாகவும்.
 சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ கட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது Kideos.com. 








 இந்த தளத்தில் சிறுவர்களின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப இங்கு வீடியோ
 காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் காட்டூன் மற்றும் சிறுவர்கள் குழந்தைகளின் சுவையான வீடியோ காட்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படங்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகள் என பல ஏராளமான வீடியோ தொகுப்புக்கள் இங்கு உள்ளன .




இங்குள்ள வீடியோ காட்சிகளை பெரியவர்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது குழந்தைகளின் கள்ளங்கபடமில்ல செயற்பாடுகள் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும். அத்துடன் நீங்கள் ரசிக்கும் வீடியோ கட்சிகளை சமூகவலைத்தளங்களில் பகிர முடியும் .
தளமுகவரி www.kideos.com

நீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா?



இசையில் ஆர்வம் உண்டா, நீங்களும் இனி ஒரு இசை புயல் தான், உங்க ப்ரௌசெர்ஐ ஒரு இசை கருவியா பயன்படுத்திக்குங்க..


ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்

எந்தவொரு இணையத்தளத்தயும் பார்ப்பதற்கு அழகாக மாற்றுவது அதன் பனர்தான். பனர் இல்லாத தளம் அழகற்று மொட்டையாக இருக்கும். ஆனால் பலருக்கு போட்டோசொப்பில் பனர் டிசைன் பண்ணுவது என்பது கடினமான வேலைதான். ஆனால் அதுவும் இப்போது இலகுவாகிவிட்டது.

ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்களை வடிவமைத்து அதனை நீங்களே உங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் திருத்தம் செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் PSD Format இல் தந்துள்ளார்கள். அவற்றைத் தொகுத்து கீழே தந்துள்ளேன். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் பதிவிறக்கம் செய்து போட்டோசொப் மென்பொருளின் ஊடாக அதனை திறந்து உங்களுக்கு வேண்டிய மாற்றத்தை செய்வது மாத்திரமே.

டவுண்லோட் செ
ய்வதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்



Template 1



Template 2


Template 3


Template 4


Template 5


Template 6


Template 7


Template 8


Template 9


Template 10


Template 11


Template 12


Template 13


Template 14


Template 15