Wednesday, July 20, 2011

பேஸ்புக்கை வீழ்த்துமா கூகுள் + - கருத்து கணிப்பு

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ்புக் எனும் ஒரே தளத்தின் வளர்ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த ஆய்வின் படி பேஸ்புக் தளம் கூகுள் தேடியந்திரத்தை விட ரேங்கில் உயர்ந்தது. ஆனால் பல கிளை (youtube,blogger,Gmail) தளங்களை கூகுள் வைத்திருந்ததால் அவைகளின் துணையோடு முதலிடத்தை தக்கவைத்தது.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேஸ்புக் முதலிடத்திற்கு வந்துவிடும் என்று இணைய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இது மேலும் கூகுளின் வயிற்றில் புளியை கரைத்தது. நிலைமையை புரிந்து கொண்ட கூகுள் சுதார்த்து கொண்டு கூகுள்+ எனும் சமூக இணையதளத்தை வெளியிட்டுள்ளனர். இந்த தளம் வெளியிட்ட அடுத்த மணி நேரத்தில் இந்த வசதியை பெற வாசகர்கள் குவிந்தனர். கூகுள் சர்வர்கள் ஸ்தம்பித்தது. இந்த அளவு ஆதரவை எதிர்பார்க்காத கூகுள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தது. சர்வர்கள் பிரச்சினையால் புதிய வாசகர்களுக்கு வசதி கொடுப்பதை நிறுத்தினர்.  இன்றளவும் இந்த தளம் சோதனை பதிப்பிலேயே தான் உள்ளது. ஆனால் சோதனை பதிப்பிலேயே இந்த தளத்தை மில்லியன் கணக்கான வாசகர்கள் பயன்படுத்தி கொண்டு உள்ளனர்.

ஏதாவது புதையல் இருக்குமோ?? மாப்ள எட்றா அந்த அருவாள...

No comments:

Post a Comment