Saturday, July 2, 2011

ஜிமெயிலின் புதிய அழகான தோற்றத்தை நீங்களும் பெற


இணையத்தில் ஜாம்பவானான கூகுளின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவை தளம்(இதை பற்றி மேலும் அறிமுகம் தேவையில்லை. ) தனது தளங்களின் தோற்றத்தை அழகாக மாற்றி கொண்டு வரும் கூகுள் ஜிமேயிளிளிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது.  இந்த தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமின்றி வேகம் குறைந்த கணினிகளிலும் திறக்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளது.
கீழே ஜிமெயிலின் புதிய தோற்றம் எப்படி உள்ளது என பாருங்கள்.

இது இன்பாக்ஸ் பகுதி 



இது மெயில் பகுதி



இந்த புதிய தோற்றத்தை ஜிமெயில் நிறுவனம் தீம்ஸ் வடிவில் கொடுத்துள்ளது.

இந்த புதிய தோற்றத்தை கொண்டு வர உங்கள் ஜிமெயிலில் Settings- Themes பகுதிக்கு சென்று புதியாதாக இருக்கும் இரண்டு தீம்களில் (preview, Dense Preview) இவை இரண்டில் ஏதேனும் ஒரு தீமை தேர்வு செய்தால் போதும் அடுத்த நிமிடம் உங்கள் ஜிமெயில் புதிய தோற்றத்தோடு காணப்படும்.

No comments:

Post a Comment