Saturday, July 16, 2011

தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம்: உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன.
ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன.
அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.
அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை கொண்டுள்ளது.
இவற்றை யராலும் இலகுவாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன.
இவை பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுகின்றன.
இக் கருவிகளை கண்டுபிடிப்பதற்காக பெருந்தொகை பணத்தினை சில நாடுகள் செலவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment