Tuesday, July 26, 2011

கூகுள் பிளசில் உங்கள் அப்டேட்களை பார்க்க முடியாதவாறு ஒருவரை தடை செய்ய


பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணைய தளம் உபயோக படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்க படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே. சமூக இணைய தளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும் அவர்களும் தகவல்கள் பார்த்து அதற்க்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.
தடை செய்வதால் ஏற்படும் பயன்கள்:  
  • அவருடைய அப்டேட்கள் இனி உங்கள் Stream பகுதியில் அப்டேட் ஆகாது.
  • நீங்கள் அப்டேட் செய்யும் செய்திகளுக்கு அவரால் கமென்ட் கூட போட முடியாது. 
  • Block செய்வதால் உங்கள் Circle-ல் இருந்து நீக்க படுவதால் உங்களின் அப்டேட்கள் அவருக்கு செல்லாது.
  • ஆனால் முக்கியமான விஷயம் நீங்கள் Public பகுதியில் பகிரும் விஷயத்தை தடை செய்தாலும் அவரால் பார்க்க முடியும்.
தடை செய்யும் முறை 
  • இதற்க்கு முதலில் அந்த குறிப்பிட்ட நபரின் புரோபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • அவர் ஏதாவது கேமென்ட் போட்டிருந்தாலோ, உங்கள் circle-ல் அவர் இருந்தாலோ அந்த போட்டோவை க்ளிக் செய்தால் அவரின் புரோபைல் பகுதிக்கு அழைத்து செல்லும். 
  • அடுத்து கீழே படத்தில் காட்டியுள்ளது போல Block என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் 
  • அங்கு உள்ள Block பட்டனை அழுத்தினால் அவரின் ஐடி தடை செய்யப்பட்டு விடும். 
  • உங்கள் அப்டேட்களை அவரால் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment