Thursday, July 7, 2011

உங்கள் கணினியை WI-FI ஹாட்ஸ்பாட் ஆக மாற்றுங்கள் ! ! !



ணினியில் இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த செல்பேசி தரைவழி பரோட் பேண்ட் , வயர்லெஸ் டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம் பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணினியை மட்டுமே பயன்படுத்துவோம் .

இரண்டு கணினிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர் . இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இன்டர்நெட் இணைப்பையும் பல கணினிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது CONNECTIFYஎன்ற மென்பொருள் .

இந்த மென்பொருள் மூலம் கணினியில் பயன்படுத்தும் எந்தவொரு இன்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணினிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம் .

இதற்க்கு கணினியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும் . மேலும் கணினியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும் . லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரௌட்டர் தனியாக நிறுவப்பட்டிருக்க வேண்டும் .








இந்த மென்பொருள் என்ன செய்கிறது ? 

இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது.இதன் மூலம் செல்பேசி , பரோட் பேண்ட் ,3-G , வை-பை போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும் . உங்கள் கணினியை மற்ற கணினிகள் அணுகுமாறு வை-பை ஹாட்ஸ்பாட்டை ( WI-FI Hotspot)போல மாற்றுகிறது .

இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவியும் ( MOBILE ,PC, LAPTOP, TABLET PCS, ANDROID DEVICES) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் . இதற்க்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல்லை வைத்து கொள்ள முடியும் . பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தல் மட்டுமே இணைப்பை பெற முடியும் .



எப்படி பயன்படுத்துவது : 

1. இந்த சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிறக்கி   நிறுவிக்     கொள்ளுங்கள்.

2.நிறுவியதும் உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் வலதுபுறத்தில் மென் பொருள் ஐகானாக தோன்றும் .அதை கிளிக் செய்தால் மெயின் விண்டோ திறக்கும் .

3.WI-FI Name - உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும் . மற்ற கணினிகளில் இந்த பெயர் தான் தெரியும் .

4. PASSWORD - மற்ற கணினிகள் உங்கள் இணையத்தை பயன்படுத்த அல்லது அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லை சொடுக்கவும் . குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5.INTERNET - இஹ்டில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதை தேர்வு செய்யவும் .

6.WI-FI இதில்  உங்கள் கணினியின் வயர்லெஸ் அடாப்டேரைத் தேர்வு செய்யவும்.

7.பின்னர் START HOTSPOT என்பதை கிளிக் செய்தால் போதும் . இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும் .

இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்பதைCONNECTED CLIENT -இல் பார்க்க முடியும் .

இதில் ஏற்கெனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிர முடியும் . இந்த மென்பொருளை வீடுகள் , கல்லூரிகள் , கடைகள், அலுவலகங்கள் என  இல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் . சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் .

மேலும் இதைக் கொண்டு வணிக அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம் .


இறுதியாக ஒரு ஆச்சரியமான விஷயம் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது .

No comments:

Post a Comment