கூகிளின் புதிய அறிமுகமான கூகுள் ப்ளஸ்இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக இணையத்தில் இதை பற்றி தெரிந்துக் கொள்வதற்காகவே அதிக நேரம் நான் செலவிட்டேன். எந்த தொழில்நுட்பத் தளங்களுக்கு சென்றாலும் இதைப் பற்றி தான் பேச்சு. நேற்றே இதைப் பற்றி பதிவிடலாம் என எண்ணினேன். அதற்குள் ஒபாமா செய்தி வந்ததால், அதை பதிவிட வேண்டியதாயிற்று.
இனி நான் தெரிந்துக் கொண்டவற்றை பகிர்கிறேன்.
1. கூகிள் ப்ளஸ் பயன்படுத்த பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என அறிவித்தது. அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பலாம் எனவும் அறிவித்தது. ஆனால் அறிவித்த சில மணிநேரத்திற்குள் அதிகமான கோரிக்கை வந்ததால், தற்போது அழைப்பிதழை நிறுத்திவிட்டது. இனி புதியவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
2. அழைப்பிதழை நிறுத்திவிட்டாலும் எங்கு பார்த்தாலும் "எனக்கு அழைப்பு கொடுங்கள்", "எனக்கு அழைப்பு கொடுங்கள்" என்ற கோரிக்கைகள்தான். கூகிளின் பேஸ்புக் பக்கமும் இது போன்ற கோரிக்கைகளால் நிரம்பி வழிகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. நானும் முதலில் அது போன்ற கோரிக்கைகள் வைத்தேன். பிறகு நிறுத்தி விட்டேன்.
3. கூகிள் ப்ளஸ் அழைப்பிதழுக்கு Demand அதிகமாக இருந்தது. சிலர் ebay போன்ற இணைய சந்தைகளில் விற்க ஆரம்பித்தனர். சிலர் குறைந்தபட்சமாக 0.01 அமெரிக்க டாலரும், சிலர் அதிகபட்சமாக 99.99 அமெரிக்க டாலரும் விலை நிர்ணயித்துள்ளனர்.
4. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தது தான். அதுமட்டுமின்றி கூகிள் ப்ளஸ்ஸில் அதிகமானோர் பின்தொடரும் (Following) நபராக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார்.
5. ஆன்ட்ராய்ட் (Android) மொபைல்களுக்கான கூகிள்+ சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ள கூகிள், தற்போது ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கானசாப்ட்வேரையும் உருவாக்கி ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் அனுமதி கொடுத்ததும் வெளிவரும்.
6. பேஸ்புக்கில் பிரபலமான CityVille, FarmVille போன்ற விளையாட்டுக்களை உருவாக்கிய Zynga நிறுவனத்துடன் இணைந்து Google+ Games வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
7. தற்போது கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் பெயரில் அதிகமான ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படுகின்றன. உங்களுக்கு அப்படி எதுவும் வந்தால் க்ளிக் செய்ய வேண்டாம். உடனே Delete செய்யவும்.

No comments:
Post a Comment