- இதற்கு எந்த மென்பொருளும் இணைக்க தேவையில்லை. எந்த இணையதளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை நம் கணினியிலேயே செய்து கொள்ளலாம்.
- இதற்கு முதலில் உங்கள் டாஸ்க்பாரின் START க்ளிக் செய்து அடுத்து RUN க்ளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு வரும் விண்டோவில் cmd என்று டைப் செய்து OK கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கு comand prompt விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் நீங்கள் ping www.google.com என்று கொடுத்து என்ட்டர் தட்டவும்.
- என்ட்டர் கீயை அழுத்தியவுடன் உங்களுக்கு கூகுள் தளத்திற்கான ஐ.பி எண் வந்திருக்கும்.
- நான் படத்தில் காட்டியுள்ளதை போல உங்களுக்கு ஐ.பி எண் வந்திருக்கும். உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் இந்த ஐ.பி எண்ணை கொடுத்து என்ட்டர் கீயை அழுத்தினால் உங்களுக்கு கூகுள் தளம் ஓபன் ஆகும்.
- இதே முறையில் நீங்கள் தேவையான தளத்தின் ஐ.பி எண்ணை கண்டறிந்து ஓபன் செய்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் ஜிமெயில் வழங்கும் இலவச எமில் சேவையை பயன் படுத்தி வருகிறோம். இதில் நமக்கு ஏதேனும் மெயில் வந்துள்ளதா என கண்டறிய அந்த மெயில் முகவரிக்கு சென்று பார்த்தால் தான் தெரியும். இனி அப்படி செய்ய தேவையில்லை இந்த நீட்சியை உங்கள் உலவியில் நிறுவியவுடன் உங்கள் இன்பாக்ஸில் எத்தனை படிக்காத மெயில்கள் உள்ளது அதனை அனுப்பியவரின் பெயர் மற்றும் புதிய மெயில் வந்தவுடன் எச்சரிக்கை செய்தி போன்ற மிகவும் பயனுள்ள வசதிகள் இந்த நீட்சியை நிறுவினால் பெறலாம்.
No comments:
Post a Comment