Sunday, July 3, 2011

ப்ளாக்கரில் Drop-Down Navigation Bar உருவாக்குவது எப்படி?

இன்று பல பதிவர்கள் தமது வலைப்பதிவில் Navigation Bar வைப்பதில் விருப்பம் கொண்டுள்ளனர். தமது பதிவுகளை வகைப்படுத்தி, வாசகர்கள் இலகுவாக படிப்பதற்கு இந்த Navigation Bar உதவுகிறது. ஆனால் இது அதிக இடத்தை பிடித்து கொள்வதால் வேறு விட்ஜெட்டுகளை வைப்பது கடினமாகிறது. 


ஆகவே அதைவிடுத்து Drop-Down Navigation Bar ஐ நம் வலைப்பதிவில் வைப்பதன் மூலம் இந்த வேலைகளை இலகுபடுத்தலாம். அதாவது Navigation Bar செய்யும் அதே தொழிற்பாட்டை இந்த  Drop-Down Navigation Bar செய்கிறது. ஆனால் இங்கே இடம் மிச்சப்படுத்தப்படுகிறது.

சரி இதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்
இதற்கு முதலில் இந்த தளம் செல்ல வேண்டும். அங்கு முதலாவதாக காணப்படும் Option இல் நீங்கள் விரும்பியதை தெரிவு செய்யலாம்
அடுத்து அதற்கு கீழே உள்ள பட்டியலில் Drop-Down Navigation Bar இல் வரவேண்டிய பக்கப் பெயர்களையும், அதற்கான இணைப்புக்களையும் கொடுத்துவிட்டு கீழே உள்ள Generate பட்டனை அழுத்தினால் உங்களுக்கான Code தரப்படும்.
அதை காப்பி செய்து உங்கள் ப்ளாக்கர் டாஸ்போர்ட் சென்று Design-  Page Element - Add a Gadget - HTML/Java Script  என்ற வழியே இணைத்துவிட்டால் உங்கள் வலையில் Drop-Down Navigation Bar சேர்ந்துவிடும்.

தளம் செல்வதற்கு

No comments:

Post a Comment