Friday, July 22, 2011

rundll32.exe கோப்பின் வேலையும் பயன்பாடுகளும்


விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment