Sunday, July 17, 2011

ஒரு நகரமே கமெரா லென்ஸுக்குள்! - (உலகின் மிகப்பெரிய புகைப்படம் இது தான்)


உலகில் முதன் முறையாக, 111 கிகா பிக்க்ஷல் கமெரா கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதைக்கொண்டு, 'செவிலி' (Seville) எனும் ஸ்பெயின் நாட்டின் நான்காவது மிகப்பெரிய நகரின் அழகை புகைப்படமாக எடுத்தார்கள்.
கடந்த டிசெம்பரில் இருந்து, இது தான் உலகின் மிகப்பெரிய புகைப்படமாக இருக்கிறது. ஆனால் அண்மையில் தான் வெளியிட்டார்கள்.

613,376 x 181,248 Pixel நீள அகலம் கொண்ட இப்புகைப்படம், கிட்டத்தட்ட 9,750 படக்கோர்வைகளை கொண்டுள்ளது. நகரின் 60 மீற்றர் உயரத்தில் Torre Schindler எனும் இடத்திலிருந்து இப்புகைப்படத்தை எடுத்துள்ளார்.
Sevilla 111 Gigapixels என இந்த புகைப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை யாரும் கடதாசியில் அச்சடிக்க (Print) விரும்பினால் இரண்டு காற்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு (13,800 சதுர அடி பரப்பளவு) கடதாசி கொண்டு வாருங்கள் என்கிறார்கள்.

ஏற்கனவே இப்புகைப்படத்தை பற்றி பலர் அறிந்திருக்கலாம். இன்னமும் பார்த்திருக்கவில்லை என்பவர்கள் இந்த லின்கில் சென்று பார்வையிடலாம்.
முடிந்தளவு ZOOM in Zoom out செய்யலாம். (கீழ் கட்டங்களில்  உதாரண படங்களும் போட்டிருக்கிறார்கள்)

இன்னுமொரு கொஞ்ச நாட்கள் பொருத்திருங்கள். கைத்தொலைபேசியிலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவந்து விடுகிறோம் என்கிறார்கள் இதையெடுத்த புகைப்பட காரர்கள்.
இவ்வளவு பெரிய புகைப்படத்தை எடுத்த அந்த 111gigapixel camera இது தான்!

படங்கள் - http://www.sevilla111.com/

No comments:

Post a Comment