Wednesday, July 13, 2011

அடையாளம் காட்டாமல் கலக்கலாம் .



நாம் இணையத்தளத்தில் நுழைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு தெரியாத நபர்களால் பதிவு செய்யப்படுகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ஆனால் இது தான் உண்மை. உதாரணமாக கூகுள் இணையத்தளத்திற்குள் நுழைந்து, நமக்கு தேவைப்படும் தகவலை தேடினோம் என்றால், நாம் தேடும் தகவல்கள் கூகுள் நிறுவனத்தால் பதிவு செய்யப்படும். நான் எந்த பகுதியில் இருந்து இன்டர்நெட் பயன்படுத்துகிறோம்? நமது கம்ப்யூட்டர் எந்த வகையானது? போன்ற பல தகவல்கள் மற்றவர்களால் பதிவு செய்யப்படும். ஆனால் உங்கள் அடையாளமே தெரியாமல் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தருகிறது இந்த இணையத்தளம் 
http://anonymouse.org/anonwww.html இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் பார்க்க விரும்பும் இணையத்தளத்தின் முகவரியை அளிக்க வேண்டும் உடனே இந்த இணையத்தளத்தின் வழியாக நான் விரும்பிய இனத்தலத்தினை படிக்கலாம். இதனால் நம்மை பற்றிய தகவல்கள் எங்கும் பதிவாகாது.
இந்த இணையத்தளத்தின் மூலம் நாம் விரும்பும் நபர்களுக்கு அனாமத்தான இ மெயில்களை அனுப்பும் வசதியும் உண்டு. சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரியை அளித்து, நாம் அனுப்ப வேண்டிய செய்திகளை டைப் செய்து ஒ .கே அளித்தால் போதும் நம்மை பற்றிய தகவல்கள் இல்லாமல் தகவல்கள் அந்த இ மெயில் முகவரிக்கு சென்று சேரும். இதை போன்று 'யாகூ குரூப்ஸ் , கூகுள் குரூப்ஸ் போன்ற குழுக்களும் இது போன்ற அனாமத்தான தகவல்களை அனுப்பும் வசதியும் இலவசமாக வழங்குகிறார்கள். அடையாளமின்றி இணையத்தளத்தை பயன்படுத்த இந்த வசதிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
அறிவியலின் வளர்ச்சியை நாம் பயனுள்ள வகையிலும் பிறருக்கு கேடுவிளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment